மின்சார கார் உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக இருக்கும் சீனா!
#China
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
ஜேர்மனியின் முனிச் நகரில் நாளைய (05.09) தினம் சர்வதேச மோட்டார் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் மின்சார கார்களின் வளர்ச்சியில் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகம் காண முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார கார் உற்பத்தியின் விநியோகச் சங்கிலியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சீனா தனது தயாரிப்புகளை IAA MOBILITY கண்காட்சிக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சிக்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களில் 41 சதவீதம் ஆசியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் என்பது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவில் மின்சார கார் உற்பத்தியின் முன்னேற்றம் ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு சவாலாக இருக்கும் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.