இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்

#India #Death #2023 #Tamilnews #Breakingnews #Died #Scientist #ISRO
Mani
2 years ago
இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். இத்தகைய மக்கள் தொகை மிகுந்த நாட்டில் சிலரின் குரலுக்கென தனி அடையாளம் உண்டு. தனித்துவமிக்க குரல்களால் அவர்கள் பிரபலம் அடைந்ததும் உண்டு.

அந்த வகையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் போது வர்ணனை செய்யும் பெண் குரலுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி வளர்மதி. இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ராக்கெட்டுகளுக்கு மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக (வர்ணனையாளராக) பணியாற்றியுள்ளார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு அறிவிக்கப்படும் கவுண்டவுன் விஞ்ஞானிகளை மட்டுமல்ல நம்மையும் பரபரப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும்.

இத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!