கேரளாவில் வரும் 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Rain
#HeavyRain
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

வடகிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் செப்டம்பர் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கனமழை காரணமாக ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்யவோ, கடற்கரைக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



