தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
#SriLanka
#Death
#Hospital
#Lanka4
Kanimoli
2 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவரின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளிக்கு வழங்கப்பட்ட amoxyclav என்ற நோய் எதிர்ப்பு மருந்தின் மாதிரிகளும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் பெறுபேறுகள் கிடைத்த பின்னரே மரணம் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.