நீரிழிவு நோயாளிகள் பக்கவிளைவுகள் வராது காத்துக்கொள்ளும் முறை

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம் #Hypertension
Mugunthan Mugunthan
5 months ago
நீரிழிவு நோயாளிகள் பக்கவிளைவுகள் வராது காத்துக்கொள்ளும் முறை

நீரிழிவு நோயாளிகள் பக்கவிளைவுகள் வராமலோ அல்லது குறைந்தபட்சம் வருவதைத் தள்ளிப்போடவோ, தகுந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அல்லது வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பர் இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

ஆனால் பக்கவிளைவுகளாகப் பலநோய்கள் வருகின்றன. இம்மருந்துகள் பக்க விளைவுகளைத் தடுப்பதில்லை. பக்கவிளைவுகள் வராமலோ அல்லது குறைந்தபட்சம் வருவதைத் தள்ளிப்போடவோ, தகுந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

சிறுநீரக பாதிப்பு பொதுவாக, எல்லோரும் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கருத்தைப் பின்பற்றி நீரிழிவு நோயாளிகளும் அதிகம் தண்ணீர் குடிக்கின்றனர். 

அதன் காரணமாக பாதத்தில் வீக்கம் வருகிறது. அதைப்போக்க யூரியாவை வெளியேற்றும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இம் மருந்துகளால் அதிக தாகம் எழுகிறது.

 இந்த சுழற்சி தொடர்கிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அல்புமின் என்ற புரோட்டின் சிறுநீர் வழியே வெளியேறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் யூரியா க்ரியாட்டின் ஆகியன அதிமாகின்றன.

 எந்நேரத்திலும் டயாலிசிஸ் தொடங்கப்படலாம். இந்நிலை வந்த பிறகுகூட குறைந்தபட்சம் நோயைக் கட்டுப்படுத்தலாம். இல்லாவிடில் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்றம் அவசியமாகிறது.

images/content-image/1693812962.jpg

 நமது உணவில் இருக்கும் நச்சுப்பொருட்கள் கழிவு களாக வெளியேற்றப்படும்போது (இரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாக) அந்த வேலைப்பளுவாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். 

ஆகவே பாதிப்பு எதனால் என்பதை அறிந்தால் தான் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும. கண்கள் பாதிப்பு உணவில் அதிக உப்பு சேர்ப்பதாலும், உப்பு அதிகம் சேர்க் கப்படும் ஊறுகாய், சிப்ஸ், பிஸ்கட், வறுத்த முந்திரி, கடலை, சீஸ் ஆகியன அதிகம் சாப்பிடு வதாலும், அதிக புளிப்புச்சுவையுடைய உணவுகளான தயிர், மோர், தக்காளி, மாங்காய், நொதிக்க செய்த உணவுகள் ஆகியவற்றை அதிகம் உண்பதா லும், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகிய உளவியல் காரணங்களாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்கள் பாதிக்கப்படுகின்றன.

 தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் பார்வை கூட பாதிக்கப்படும். நோய் வராமல் தடுப்பது, வந்தபின் சிகிச்சை மேற்கொள்வதை விட நல்லது. Diabetic Neuropathy உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பது, உணவில் நெய், எண்ணெய் ஆகியவற்றைக் குறைப்பது ஆகியன வாததோ‌ஷத்தின் நிலைப்பாட்டில் மாறுதலைக்கொணர்ந்து இந்நோயை உண்டாக்குகிறது. 

இதனால் கடுமையான கால்வலி, தோல் வறண்டு, கறுத்து போதல் ஆகிய நேரும். நெய், எண்ணெய் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்துவது, ஆயில் மசாஜ் போன்றவை பயன்தரும். மன அழுத்தம் கவலை போன்ற நிலை இருப்பின், அவற்றை மாற்ற வேண்டும். 

Congrene; Diabetic foot நீரிழிவு நோய் பல ஆண்டுகள் தொடரும் போது பாதங்களில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உணர்ச்சி குறையும். பஞ்சு மீது அல்லது ஈரமணல் மீது நடப்பது போல தோன்றும். இது ஆரம்ப நிலை. 

நாளடைவில் ரத்த ஓட்டம் குறைந்து, திசுக்கள் இறந்து, தோல் நிறம் கறுத்துவிடும், கால் விரல்கள் அழுகத் தொடங்கும், புண் ஆறாமல் உள்ளே எலும்பு வரை பாதிக்கும், கால்விரலில் தொடங்கி காலையே எடுக்குமளவு பாதிப்பு வரும். 

மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு சரி செய்து கொள்ள வேண்டும். உணவு முறை ‘‘மாடு கட்டிப்போரடித்தால் மாளாது செந்நெல்’’ என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் நமது தமிழ்நாட்டில் அரிசியே முக்கிய உணவாக இன்று உள்ளது.

 முன்பு உபயோகித்த கைக்குத்தல் அரிசியில் சத்துக்கள் காக்கப்பட்டன. இன்று நாகரிகம் என்று பெயரில் அரிசியை பாலிஷ் செய்யும்போது சத்துக்கள் அழிந்துபோகின்றன. 

images/content-image/1693813338.jpg

வெறும் கார்போ ஹைட்ரேட்டின் திரட்சியாக அரிசி உள்ளது. அரிசிக்கும், கோதுமைக்கும், கார்போ ஹைட்ரேட் அளவில் அதிக வேறுபாடு இல்லை. ‘‘க்ளுடன்’’ என்னும் நார்ச்சத்து இருப்பதால் கோதுமை செரிமானம் நடக்கச் சற்று தாமதம் ஆகிறது. 

இதனால் ரத்தத்தில் க்ளுகோஸ் கலக்கவும் தாமதம் ஆகிறது. ஆகவே அரிசி உணவை விட பசி எடுக்க தாமதம் ஆகிறது. ஒரு மூட்டை தானியத்தை பிரித்துக் கொட்டினால் அது எவ்வளவு வேகமாகக் கீழே சிதறுமோ, அதுபோல அரிசி, கோதுமையிலுள்ள சர்க்கரை விரைவில் இரத்த ஓட்டத்தில் கலந்து விடும். 

ஒரு மூட்டை தானியத்தில், ஒரு துவாரம் உண்டாக்கினால் அவ்வழியே தானியம் எப்படி மெதுவாக வெளிவருமோ, அதுபோல சிறுதானியங்களில் இருக்கும் சர்க்கரை மெதுவாக ரத்தத்தில் கலக்கும். மேலும் சிறுதானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், அரிதான தாது உப்புகள் ஆகியன இருக்கின்றன. 

ஆகவேதான் சிறுதானியங்களை அதிகளவில் சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறார்கள். சிறுதானியங்கள் என்று சொல்லும்போது ஏதாவது ஒன்றிரண்டை சேர்க்கலாம். அதிக எண்ணிக்கையில் கலந்தால் செரிமானம் சிரமம் ஆகும்.

 ஒவ்வொரு பொருளும், குடலின் வெவ்வேறு இடங்களில், வேறுவேறு நேரங்களில் செரிக்கப்படும். செரிமானத்துக்குத்தாமதம் ஆகும். கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும்போது அவற்றோடு சேர்த்து அதிக காய்கறி உணவுகளைச் சாப்பிடலாம். 

சமைக்கும்போது அதிக காய்கறி பருப்பு வகைகளைச்சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக வெறும் அரிசி, உளுந்து அரைத்து, இட்லி செய்வதற்கு மாற்றாக காஞ்சிபுரம் இட்லி, சிறுதானிய இட்லி செய்யலாம். 

இட்லி மாவுடன் விருப்பமான காய்கறிகளில் மசாலா சேர்த்துக்கலந்து இட்லி, தோசை, பணியாரம் செய்யலாம். சப்பாத்தி மாவுடன், வேக வைத்த பருப்பு, கடலை மாவு, சோயா மாவு சேர்த்து கூட விருப்ப மான காய்கறி துருவியது, மசாலாப்பொடிகள் சேர்த்துப்பிசைந்து சப்பாத்தி செய்யலாம். சப்பாத்தி மாவில் காய்கறிக்குப்பதிலாக கீரை வகைகள், முட்டை, கைமா எனப்பலவிதமான பொருட்களைச் சேர்க்கலாம்.

 காய்கறி மசாலாவைத்தனியே தயாரித்து திரட்டிய சப்பாத்தி மீது வைத்து மடித்தும் சப்பாத்தி செய்யலாம். உப்புமா, சேவை போன்றவற்றுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்க்கலாம்.

 சிப்ஸ் வடை போன்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங் களுக்குப்பதிலாக சுண்டல், ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டை, டோக்ளா போன்றவற்றை உண்ணலாம். அவல், நெற்பொரி போன்றவற்றுடன் துருவிய காய்கறி சேர்த்து chat ஆக எடுக்கலாம். வெள்ளரி, கேரட் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

# ஆயர்வேதம் உளுந்து, தயிர் ஆகிய வற்றை அனுமதிப்ப தில்லை. 

#சிறுநீரகப் பாதிப் புள்ளவர்கள் அதிகப் படியான தண்ணீர் குடிக்கக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறும், ஆனால் பழக்கதோ‌ஷம் காரணமாக மக்கள் அதிகம் தண் ணீர் குடித்து, சிறுநீர கத்துக்கு அதிக வேலைப்பளு கொடுத்துப்பாதிப்பு நேருகிறது.

 # தக்காளியின் அதிகப்பயன்பாடு, சிறுநீரகப்பாதிப்புக்கு காரணமாகிறது. * ஊறுகாயும், மசாலாப்பொருட்களும் கண்கள் பாதிப்பை கொணரும். 

# உப்பின் அளவு குறைய வேண்டும் ‘ராக்சால்ட்’ கடலுப்பைவிட நல்லது. 

# அரிசி மற்றும் பிற தானியங்களை வறுத்து, பிறகு வேக வைப்பது நல்லது.

 # பாகற்காயும், வெந்தயமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் எடை குறையும், வாதம் குறையும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1693814785.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு