ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ரத்து : இலங்கைக்கு பின்னடைவு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தருவதாக அறிவித்த நிலையில், இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவருடைய வருகை எப்போது இடம்பெறும் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது உலக அரசியல் தலைவர்களின் கவனம் இதன்பக்கம் திரும்பியுள்ளது. ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்ட விவகாரம் இலங்கைக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.
உலகின் நான்காவது பலம் வாய்ந்த .இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் வருகை இரத்து செய்யப்படுவது கடுமையான பிரச்சினை என அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.