மன்னார் வங்காலையில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்
#SriLanka
#Mannar
#Lanka4
Kanimoli
2 years ago
மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களுடன் வன்னி மண் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித ஆனாள் ஆலய வளாகத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணி வரை நடை பெற்றது.
'உதிரத்தை தானம் செய்!உதிரப் போகும் ஒரு உயிர் உதிராமல் இருக்க காவல் செய்' என்ற நோக்கத்திற்காக நடைபெற்ற இரத்த தான முகாமுக்கு நிதி அனுசரணை யாழ் மதர் கெயார் வைத்தியசாலை உரிமையாளர் வைத்திய கலாநிதி குலசிங்கம் சுரேஷ்குமார் வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.சுமார் 50க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் குருதி தானம் செய்திருந்தமை விசேட அம்சமாகும்.