மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்!

#SriLanka #Lanka4 #kanchana wijeyasekara
Thamilini
2 years ago
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்!

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால் எந்தவொரு ஊழியரும் வேலை இழக்க மாட்டார்கள் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மனித வள கணக்காய்வு இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மின்சார சபையின் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படுவதற்கு 07 வருடங்களாக காத்திருக்கும் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து எதிர்கால சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

மேலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையில் உருவாக்குகின்ற கருத்துக்களால், நிரந்தரமற்ற இந்த ஊழியர்களிடையே மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!