தைவானில் விமானங்கள் இரத்து!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

தைவானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று (03.09) இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முவ்வாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹைக்கூய் சூறாவளி காரணமாக தைவானின் பலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நிலச்சரிவு ஏற்படும் அனர்த்தம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



