லான்சாவின் புதிய கூட்டணியை வழிநடத்தவுள்ள அநுர

#SriLanka #srilankan politics
Prathees
2 years ago
லான்சாவின் புதிய கூட்டணியை வழிநடத்தவுள்ள அநுர

பாராளுமன்ற உறுப்பினர் திரு.நிமல் லான்சா உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் செயற்பாடுகளை வழிநடத்த குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

 நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகியோரின் முன்மொழிவுகளினால் இந்த நியமனம் உறுதிசெய்யப்பட்டதுடன் ஏனைய குழுவினரும் இணக்கம் தெரிவித்தனர்.

 இதன்படி, புதிய கூட்டணியின் கட்சி விவகாரங்களை நிர்வகிப்பது மற்றும் தீர்க்கமான சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பொறுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர யாப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 புதிய கூட்டணியின் அறிமுக பேரணியை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது தொகுதி மட்டத்தில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!