இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்தியா L1 விண்கலம்!
#India
#Lanka4
Thamilini
2 years ago
ஆதித்தியா L1 விண்கலத்தை இந்தியா இன்று (02.09) விண்ணில் செலுத்தவுள்ளது.
சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபிறகு இந்தியா தனது அடுத்த முயற்சியாக சூரியனை இலக்கு வைத்துள்ளது.
இதன்படி ஆதித்தியா L1 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து செலுத்தவுள்ளது. இதற்கான கவுண்டவுன்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
4.5 ஆண்டுகள் பழமையான நட்சத்திரமாக சூரியனை நெருங்க 04 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்படுவதுடன், சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் தற்போது பூமியில் நிலவும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.