சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேர விசாரணை

#India #Court Order #Actor #Actress
Prasu
2 years ago
சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேர விசாரணை

சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்து வருகிறார்.

சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் 8 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.

 விஜயலட்சுமி அளித்த புகாரில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்கனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!