தரமான மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய குழு நியமனம்!
#SriLanka
#government
#Medicine
Mayoorikka
2 years ago
தரமான மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே செனவிரத்ன தலைமையில், இந்த குழு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்து தரமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுப்பது இந்தக் குழுவின் பொறுப்பாகும்.
செப்டம்பர் 6ம் திகதிக்கு முன்னதாக குறித்த குழுவின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.