சென்னை மெட்ரோவில் பறக்கும் ரயில் சேவை இணைப்பு விரைவில்

#Tamil People #Train #2023 #Tamilnews #MetroTrain #ImportantNews #Chennai #Station
Mani
2 years ago
சென்னை மெட்ரோவில் பறக்கும் ரயில் சேவை இணைப்பு விரைவில்

மின்சார ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களை போல் மாற்ற சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் கையெழுத்திட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும், டெண்டர் விடுதல் உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி என பல ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்படுத்தப்படும் ரெயில் நிலையங்களில் உள்ள 20,44,400 ச.மீ இடத்தில் உணவகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!