பாடசாலை நேரத்தினை அதிகரிக்க நடவடிக்கை! அமைச்சர் வெளியிடுட்டுள்ள தகவல்
#SriLanka
#Sri Lanka President
#School
#Ministry of Education
Mayoorikka
2 years ago
காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான யோசனை, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காலியில் வைத்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.