அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்படும் மறைந்த இங்கிலாந்து இளவரசியின் உடைகள்

#England #Auction
Prasu
2 years ago
அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்படும் மறைந்த இங்கிலாந்து இளவரசியின் உடைகள்

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உடுத்திய 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வருகின்றன.

அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானா உடுத்திய கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன.

1997ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த 3 கவுன்களில் டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!