சினோபாக் நிறுவனம் மத்தேகொடவில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளது.

#SriLanka #China #Lanka4 #petrol
Kanimoli
2 years ago
சினோபாக் நிறுவனம் மத்தேகொடவில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை  திறந்து வைத்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபாக் நிறுவனம், கொட்டாவ மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று திறந்து வைத்துள்ளது.

 கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று முதல் சினோபாக் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

 எதிர்காலத்தில், 150 பெட்ரோல் நிலையங்கள் சினோபாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

 மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த நாட்டில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அவர்கள் செயற்படுத்தவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!