மத்தியபிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் 5 பேர் உயிரிழப்பு
#India
#Death
#Police
#2023
#Breakingnews
#ImportantNews
#news
Mani
1 year ago

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் தனிலா பகுதியில் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இன்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் இந்த தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு, அதை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இருவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மயக்கமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



