பிரிகோஜினின் மரண விசாரணை தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட தகவல்!
#world_news
#War
#Lanka4
#Russia Ukraine
Thamilini
2 years ago
வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் பிரிகோஜினின் மரணம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமளிக்கப்படாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விமான வித்தொன்றில் பிரிகோஜின் உள்ளிட்ட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச விமர்சகர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.