மணிப்பூரில் மீண்டும் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழப்பு
#India
#Police
#Attack
#2023
#Import
#Breakingnews
Mani
1 year ago

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. அங்கு நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர், இதன் விளைவாக 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் ஏழு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து வன்முறை நடந்த இடங்களில் போலீஸ் மற்றும் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



