துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்று சுற்றிவளைப்பு : இருவர் கைது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்று சுற்றிவளைப்பு : இருவர் கைது!

துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்றை பல்லேவெல பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். 

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29.08) பிற்பகல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படும் பாகங்கள்,  ஒரு ஏர் ரைபிள், ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் குழாய், 2 கிலோ ஈயக் கட்டைகள், டிரில் இயந்திரம் மற்றும் வெவ்வேறு அளவிலான 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 62 வயதுடைய கலேலிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை  அத்தனகல்ல நீதிமன்றத்தில் இன்று (30.08) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!