இன்று விடுமுறை நாளிலும் வங்கிகள் திறந்திருக்கும்.
#SriLanka
#Bank
#Lanka4
Thamilini
2 years ago
அரச வங்கிகளை இன்று (30.08) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழமையாக போயா நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற போதிலும் இன்றைய தினம் வங்கிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கிகள் வட்டி செலுத்துவதற்காக மட்டுமே திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அதன்படி, மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பலன்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 8 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பணத்தை வங்கிகளுக்கு வழங்க திறைசேரி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.