ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்!
#SriLanka
#UN
#Mahinda Amaraweera
#Lanka4
Thamilini
2 years ago
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை உயர் மட்டத்தில் நடத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த மாநாட்டில் 44 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.