கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது!

#SriLanka #Arrest #Police #Lanka4
Thamilini
2 years ago
கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது!

பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

இந்த கும்பலில் இரண்டு பெண்களும் உள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வர்த்தக ஸ்தலங்களுக்கு இரவு வேளைகளில் புகுந்து பொருட்களை திருடுவதில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஹலவத்த - தெதுரு ஓயா பிரதேசத்தில் பூகொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஜவுளிக் கடைக்குள் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு சிறிய லாரி மற்றும் சுமார் 10 லட்சம் மதிப்பிலான துணிகள், 27 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சந்தேகநபர்களில் மூவர் தெதுரோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர் ஒருவர் பாதுக்க பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.  

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 21 வழக்குகளில் பிடியாணை பிறக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சந்தேகநபர்களை இன்று (30.08)பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!