சில பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் - மகிந்த அமரவீர!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தற்போதைய வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 58,766 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு இன்று (29.08) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரிசி, சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயாபீன் போன்ற பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய பயிர்ச் சேதங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியுமாயின் அதனையும் சமாளிக்கத் தயார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.