பிரிகோஜினின் இறுதி சடங்களில் புட்டின் கலந்துக்கொள்ள மாட்டார் - கிரெம்ளின்!

#War #Lanka4 #Putin
Dhushanthini K
2 years ago
பிரிகோஜினின் இறுதி சடங்களில் புட்டின் கலந்துக்கொள்ள மாட்டார் - கிரெம்ளின்!

வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜினின் இறுதிச் சடங்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துக்கொள்ள மாட்டார் எனகிரெம்ளின் தெரிவித்துள்ளது. 

பிரிகோஜின் மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த தனியார் எம்ப்ரேயர் லெகசி 600 தனியார் ஜெட் விமானம் கடந்த 23 ஆம் திகதி ட்வெர் பகுதியில் விபத்துக்குள்ளானது. 

அதில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்கெனி பிரிகோஜின் உள்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். 

விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள கிராமவாசிகள் ஒரு இடி சத்தம் கேட்டதாகவும், பின்னர் ஜெட் தரையில் விழுந்ததைக் கண்டதாகவும் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த விபத்திற்கும் புட்டினிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என கிரெம்ளின் மறுத்துள்ளது. இருப்பினும் அவருடைய மரணம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்நிலையில்  கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “ஜனாதிபதியின் பிரசன்னம் எதிர்பார்க்கப்படவில்லை. இறுதிச் சடங்குகள் குறித்து கிரெம்ளினிடம் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!