மின்சார பேருந்துகளின் கொள்வனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
#SriLanka
#Bus
#Lanka4
Thamilini
2 years ago
பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 200 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27.02.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மேல்மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை அரச தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை அடைவதற்கு உத்தேச திட்டத்தின் கீழ் இயக்கப்படும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை சுமார் 200 ஆக அதிகரிப்பது மிகவும் பொருத்தமானது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.