விபத்து குறித்து அறிவிக்க விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
விபத்து தொடர்பான அனைத்து விசாரணைகளையும் 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அந்த இலக்கத்தின் ஊடாக சகல விசாரணைகளையும் மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.