பொதுவான முடிவுக்காக உலகம் ஒற்றுமையுடன் உழைக்கிறது - செலன்ஸ்கி!

உக்ரேனிய வீரர்கள் அசாதாரணமாக காரியங்களை செய்துள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஏறக்குறைய 500 நாட்களை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ச்சியாக முன்னேறி வருகின்றது. தற்போது இரு நாட்டு வீரர்களும் ட்ரோன் தாக்குதல்களை பரஸ்பரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் உக்ரைனின் நீண்டநாள் கோரிக்கையான F-16 போர் விமானங்களை வழங்க நெதர்லாந்து முன்வந்துள்ளது.
இது குறித்து செலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், உக்ரேனிய வீரர்கள் அசாதாரணமான காரியங்களை செய்துள்ளனர். போர் நடவடிக்கையின்போது எங்கள் நிலத்தை விடுவிப்பது தற்செயலானது அல்ல என்பதை உக்ரைன் காட்டுகிறது.
இது நமது மக்களின் வீரம் மற்றும் நமது ஆதரவு நாடுகளின் ஆதரவும் தான். பொதுவான முடிவுக்காக உலகம் ஒற்றுமையுடன் உழைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.



