விமான எரிபொருள் விநியோகத்திற்காக விலைமுறி ஒப்பந்தம் !

#SriLanka #Sri Lanka President #Parliament #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
விமான  எரிபொருள் விநியோகத்திற்காக விலைமுறி  ஒப்பந்தம் !

ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சென்கி விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியின் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமுறிகள் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 28.08.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறு, விபரங்களுடன் பதிலளிப்புக்கள் வழங்கியுள்ள குறைந்த விலைகளை சமர்ப்பித்துள்ள Shell Markets (Middle East) Limited , ற்கு மேற்குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனி விமானங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!