எரிவாயு தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

#SriLanka #Ranil wickremesinghe #Litro Gas #Lanka4
Kanimoli
2 years ago
எரிவாயு தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

எதிர்வரும் வருடத்திற்கான LP எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50%ஐ தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

 அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

 புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மறுசீரமைப்பு செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இடையூறு இன்றி எல்பி எரிவாயு விநியோகம் செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!