இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விசேட அறிவிப்பு
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் முழு அரசியல் தலைமைகளும் ஆழ்ந்த அவதானம் செலுத்துமாறு கோரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி கடுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு ஆபத்தான சூழ்நிலையில் அரசியல் நாடகங்களை புறக்கணித்து மக்களின் அவல நிலையை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு கத்தோலிக்க சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.