விமானத்தில் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
#India
#Flight
#Airport
#children
#Breakingnews
#ImportantNews
#news
Mani
2 years ago

நேற்று இரவு பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் இருதய பிரச்சினை உள்ள 14 மாத குழந்தையும் பயணம் செய்தது. திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.
விமானத்தில் இருந்த பல மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக முதலுதவி அளித்தனர், அதே நேரத்தில் விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



