கையடக்க தொலைபேசியினால் உயிரிழந்த யுவதி!
#SriLanka
#Sri Lanka President
#Death
#Mobile
Mayoorikka
2 years ago
கையடக்க தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த யுவதி, ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி, அதே ரயிலில் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்பியுலன்ஸ் மூலம் பாணந்துறை ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய யுவதி அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பல தடவைகள் ரயிலின் ஹார்ன் சத்தம் அந்த யுவதிக்கு கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.