பங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு - இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (28.08) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெடியகல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே படுகாயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக காயமடைந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் இன்று (29.08) அதிகாலை அக்குரஸ்ஸ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான லெனமா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.