சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க மந்திரி ஆலோசனை
#China
#America
#world_news
#2023
#Tamilnews
Mani
2 years ago

சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இணைய பாதுகாப்பு குறைபாடு காரணமாக சீன தகவல் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. மேலும், தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்தநிலையில் அமெரிக்க வர்த்தகத்துறை மந்திரி ஜினா ரைமண்டோ சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை தொடங்கினார். அந்த காலகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், அவர்களின் பொருளாதார உறவுகளில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பது குறித்தும் சீன வர்த்தக துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



