பள்ளி வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்த ஆந்திர அரசு தடை
#India
#School
#Student
#Court Order
#students
#School Student
#ImportantNews
#news
Mani
1 year ago

ஆந்திராவில் பள்ளி வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை நேற்று அரசால் வெளியிடப்பட்டது.
அதன்படி மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன் கொண்டு வர அனுமதி; இருப்பினும், அவற்றை வகுப்பறைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைக்கு செல்லுமுன் ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு ஆந்திர அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.



