ஆகஸ்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஆகஸ்ட் மாதம் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 80 சதவீததத்திற்கும் அதிகமாக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் தற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஆகஸ்ட் 01 முதல் 27 ஆம் திகதி வரை, இலங்கைக்கு மொத்தமாக 123,285 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினசரி வருகை சராசரி தற்போது 4,566 ஆக இருப்பதால், இந்த மாதம் நிறைவடைவதற்குள் 142,000-145,000 சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆகஸ்ட் மாதத்தில் 1 இலட்சத்து 49 ஆயிரத்து 75 சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்ததாகவும், அந்த இலக்கை இழக்க நேரிடும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.