புகையிரத கடவைகளில் மின்சார அமைப்புகள் செயலிழந்துள்ளன - கணக்காய்வு அலுவலகம்!

#SriLanka #Railway #Lanka4
Thamilini
2 years ago
புகையிரத கடவைகளில் மின்சார அமைப்புகள் செயலிழந்துள்ளன - கணக்காய்வு அலுவலகம்!

வெளிநாட்டு உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட புகையிரத கடவைகளில் மின்சார சமிக்ஞை அமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 188 அமைப்புகளில் 94 அமைப்புகள் இதுவரை செயலிழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அதற்காக செலவிடப்பட்ட ஐநூறு மில்லியன் ரூபாய்கள் வீணாகியுள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரையோர வீதியில் பொருத்தப்பட்டுள்ள 142 மணிகள் மற்றும் மின்சார அமைப்புகளில் 60 முறையும் புத்தளம் வீதியில் 46 இல் 34 முறைமைகளும் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால் அந்த அமைப்புகளுக்கான மொத்தப் பணத்தில் 95%, அதாவது 1003 மில்லியன் ரூபா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக புகையிரத கடவைகளில் ஏற்பட்ட பெரும்பாலான விபத்துக்களுக்கு புகையிரத கடவைகளில் பாதுகாப்பு கதவுகள் இல்லாமை மற்றும் மின்சார சமிக்ஞைகள் மற்றும் மணிகள் செயற்படாதமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், மேலும் 10 சாலை பாதுகாப்பு அமைப்புகள் முறையாக சோதனை செய்யப்பட்டு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதையும் கண்ககாய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!