இணைய மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
#SriLanka
#Central Bank
#Lanka4
Kanimoli
2 years ago
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால், அந்த பிரச்சினைகளை cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து மத்திய வங்கி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.