சொந்த நிதியில் தென்னிலங்கையில் விகாரை கட்டிக் கொடுக்கும் லைக்கா சுபாஷ்கரன்!
#SriLanka
#Buddha
Mayoorikka
2 years ago
லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்ரன் அல்லிராஜாவினால் தென்னிலங்கையில் அவரது சொந்த நிதியில் விகாரை ஒன்றை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான ஆரம்பமாக விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு அண்மையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளினால் தேசாபிமானிய விருதும் வழங்கி வைக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுபாஸ்கரன் இந்தியாவில் சினிமா தயாரிப்பு துறையில் பிரபல்யமாக விளங்குவதுடன் அண்மையில் இலங்கையிலும் அவர் தனது சினிமா தயாரிப்பு துறையில் கால் பதித்துள்ளார்.
