சிறப்பாக நடைபெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மனின் மஞ்சரதத் திருவிழா
#SriLanka
#Mannar
#Temple
#Lanka4
Kanimoli
2 years ago
மன்னார் நாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசெல்வமுத்துமாரியம் ஆலயத்தின் மஹோற்சவத்தின் மஞ்சரதத் திருவிழாவும் பிதனைந்து லட்சம் பெறுமதியான மஞ்சரதத்தினை ஆலயத்திற்கு இலவசமாக உருவாக்கிக் கொடுத்த மூன்று ஆசாரியார்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவர்களுக்கான கௌரவிப்பினை மன்னார் மாவட்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய தர்மராஜா வினோதன் ஆசாரியார்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

மஞ்சரத இரவுத் திருவிழால் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருவழாவை சிறப்பித்திருந்தார்கள். மொத்தம் 15 நாள்கள் நடைபெறும் மஹோற்சவத் திருவிழாவில் இந்த மஞ்சரதத் திருவிழா 11ம் நாள் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது
