எரிபொருள் விவகாரம் : சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் விசாரணை!
சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கு தீர்மானிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை வேறு தரப்பினருக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இன்று (28.08) விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையின் விவகாரங்கள் குறித்து அண்மையில் அரசாங்கக் கணக்குக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
எரிபொருள் கொடுப்பனவை வேறு ஒருவருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யாத நிலையில் மாகாண ஆளுநர் தீவில் இருந்து வெளியில் சென்றிருந்த வேளையில் அந்த எரிபொருள் கொடுப்பனவை தனியார் செயலாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சப்ரகமுவ மாகாண சபையின் பொதுச் செயலாளரிடம் முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக விஷயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.