அடுத்த சில நாட்களில் காலநிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்
#SriLanka
#weather
#Rain
#Lanka4
Kanimoli
2 years ago
நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உதிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.