ருமேனியாவில் எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து! ஒருவர் பலி 33 பேர் படுகாயம்!

#Death #Accident #people #world_news #Breakingnews #ImportantNews #Injury
Mani
2 years ago
ருமேனியாவில் எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து! ஒருவர் பலி 33 பேர் படுகாயம்!

ரூமேனியாவில் புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த எரிவாயு நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டது.

எரிவாயு நிலையத்தில் முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பிறகு, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது. இதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

மாலை இரண்டாவது முறையாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 33 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், மூன்றாவதாகவும் வெடி விபத்து ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!