இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது - மனோ கணேசன்!

#SriLanka #Canada #Lanka4
Thamilini
2 years ago
இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது - மனோ கணேசன்!

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத்திருவிழாவில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி, தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது  எனவும் இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வை பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் கூறியுள்ளார். 

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கீறீர்கள். இதற்காக  நீங்கள் அதிகம்  பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!