பல இடங்களிலும் இடம்பெறும் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#Police
#Crime
Prathees
2 years ago
பல பகுதிகளில் பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் முன்னாள் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகளை கையாள்வதில் அவர்கள் பெற்றுள்ள பயிற்சியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுடன் இருக்கும் உறவுகளை விட்டுக்கொடுக்க முடியாமல் முன்னாள் இராணுவத்தினர் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.