மின்னேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
#SriLanka
#Death
#Police
#GunShoot
Prathees
2 years ago
மின்னேரிய, ரொட்டவெவ, கலோயா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய மின்னேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்ஓயா ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹிகுராகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.