கடத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று பிக்குனிமார் குறித்து பொலிஸார் விசாரணை
#SriLanka
#Investigation
#Missing
Prathees
2 years ago
கடத்தப்பட்டதாக கூறப்படும் மினுவாங்கொடை, பொரகொடவத்தை ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி பிரிவேனாவில் பணியாற்றிய பிக்குனிமாரைக் கண்டுபிடிக்கும் வகையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 11, 15 மற்றும் 18 வயதுடைய பிக்குனிமார் மூவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கடந்த 23ஆம் திகதி இரவு டத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.