தெஹிவளை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தெஹிவளை ஓர்பன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படோவிடா, 33 வயதுடைய மவுண்ட் பகுதியில் வசிக்கும் நபர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை, சுமுது மாவத்தை பகுதியில் நேற்று (26.08) முன்னெடுக்கப்பட் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் இன்று (27.08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.